சிவ ஆலயங்களில் பிரகாரம் சுற்றி வரும்பொழுது சண்டிகேஸ்வரர் முன் சிலர் கையை தட்டி வணங்குவதும், சொடுக்கு போட்டு வணங்குவதும் செய்கிறனர்.
இது மிக பெரிய பாவ செயலாகும். பொதுவாக சண்டிகேஸ்வரர்க்கு காது கேட்பதில்லை என நினைத்து கொண்டு இவ்வாறு செய்கின்றனர். அது தவறு. சண்டிகேஸ்வரர் ஒரு சிறந்த சிவ பக்தர். அவர் எந்த நேரமும் சிவ தியானத்தில் இருப்பவர். மேலும் சிவனுடைய கோயில் சொத்துக்களை பாதுகாப்பவர்.
நாம் சிவ தரிசனம் முடித்து செல்லும்போது சண்டிகேஸ்வரர் சன்னதியில் இந்த கோவிலில் இருந்து எந்த விதமான சொத்துக்களையும் எடுத்து செல்லவில்லை என்பதற்கு அடையாளமாக அவர் முன் மெலிதாக நம் இரண்டு கைகளையும் தடவி ஓம் நமசிவாய என கூறி வழிபட வேண்டும். இதுவே முறையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக