திங்கள், 9 அக்டோபர், 2017

நந்தி விலகிய ஸ்தலம் - திருப்புன்கூர் 



நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகில் அமைந்துள்ள தலம் திருப்புன்கூர் என்பதாகும் . இங்கு மிகப்பெரிய நந்தி சிவனை நோக்கி இல்லாமல் சற்று விலகிய நிலையில் உள்ளது .

தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்த நந்தனார் என்னும் சிவனடியார் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க செல்லும் வழியில் திருப்புன்கூர் வந்தார். அவர் தாழ்த்தப்பட்ட  குலத்தை சேர்ந்தவர் என்பதால் கோவிலினுள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வெளியில் நின்று சிவனை காணும் நோக்கில் எட்டி எட்டி பார்த்தார். ஆனால் அவரால் சிவனை தரிசிக்க இயலவில்லை. காரணம் மிகப்பெரிய நந்தி சிவலிங்கத்தை மறைத்து நின்றது. இதை அறிந்து துவார பாலகர்கள் சிவனிடம் தெரிவித்தனர்.சிவனும் நந்தியிடம் என் பக்தன் வந்துள்ளான் அவனுக்கு நான் தரிசனம் தர வேண்டும். அதனால் சற்றே விலகியிருப்பாய் என நந்திக்கு கட்டளை இட்டார். அவ்வாறே நந்தியும் விலகி நின்றது . இதன் மூலம் நந்தனார்  சிவ தரிசனத்தை காண முடிந்தது. 




இன்றும் கூட இந்த கோயிலில் நந்தி விலகி இருப்பதை நாம் காண முடியும். மேலும் இந்த தலத்தில் மற்ற தலங்களில் உள்ளதை போல நந்திக்கு நாக்கு கிடையாது. துவார பாலகர்களும் சற்றே தலையை குனிந்த  நிலையில்  இருப்பதையும் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக