தேவலோக விருட்சம்
வன்னி மரமானது தேவலோக விருட்சமாக கருதப்படுகிறது . அதன் அடியில் நின்று நாம் நினைத்ததை வேண்டிக்கொண்டால் நிச்சயம் நடக்கும் என்பது ஐதிகம் . இதன் அடியில் அல்லது இதை ஸ்தல விருட்சமாக அமைந்த கோயில்கள் மிகவும் சக்தி நிறைந்ததாக காணப்படும்.
முக்கியாமாக வன்னி மரத்தடி பிள்ளயார் மிகவும் சக்தி உடையவர். "வன்னி" என்கிற பெயரை ஒருமுறை உச்சரித்தால் பாவங்கள் விலகும் என்று ப்ரம்ம தேவன் இந்திரனிடம் கூறிய கூற்றாகும். வன்னி இலை விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கு மிகவும் பிடித்ததாகும். . அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வன்னி மரத்தை வழிபட மேன்மை கூடும்.
வன்னி வெற்றியை தரக்கூடியது. விஜயதசமி அன்று மகிஷா சுரனை அழிக்க அம்பாள் வேல் வாங்கியது வன்னி மரத்தின் அடியில் ஆகும் .
மேலும் குழந்தை பேறு இல்லாதவர்கள் வன்னி மரத்தை தொடர்ந்து சுற்றி வந்து வணங்க குழந்தை பேறு கிட்டும் என்பது உண்மை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக