சனி, 7 அக்டோபர், 2017


குல தெய்வ வழிபாடு 




நம் தலைமுறை தொடரவும் வாழும் காலத்தில் எந்தவித துன்பமும் நம்மை அணுகாமலும் இருக்க நாம் மறக்காது செய்ய வேண்டியது அவரவர் குலதெய்வ வழிபாடாகும் . இந்த குலதெய்வ வழிப்பாட்டை ஒருவர் மறக்கும் பொழுது அவரது குடும்பத்தில் எண்ணற்ற பிரச்சினைகள் தோன்றுகின்றன. அதனால் வருடத்திற்கு ஒருமுறை அவர்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டிய பூஜைகளை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

வேறு சில காரணங்களால் சிலருக்கு அவர்களது குல தெய்வம் எது என்று தெரியாமலும் பல்வேறு தெய்வ வழிபாட்டை மேற்கொள்கின்றனர். அவர்களின் ஜாதகத்தில்  உள்ள பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கொண்டு அவர்களது குல தெய்வம் எது  என்று ஒரு தேர்ந்த ஜோதிடரால் கூற இயலும். அதன்படி அவர்கள் சரியான குலதெய்வத்தையும் அது அமைந்துள்ள ஊரையும் தெரிந்து கொண்டு தவறவிட்ட வழிபாட்டை தொடர்வது நலம்.

அப்படியும் இயலாத சூழ்நிலையில் அவர்கள் கலியுக கடவுளான ஸ்ரீ வெங்கடேச பெருமாளை மானசீகமாக குல தெய்வமாக ஏற்று கொள்ளலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக