ராகு மற்றும் கேது கிரகங்களின் தோஷம் போக்ககூடிய முக்கியமான ஸ்தலம் திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் ஆகும் . இது அப்பர் சம் பந்தர், சுந்தரர் மூவராலும் பாட பெற்ற புண்ணிய ஸ்தலமாகும்.
இங்கு உள்ள கோவிலில் உள்ள மூலவரின் பெயர் பாம்புரநாதர் என அழைக்கப்படும் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் ஆவார். அம்பாள் ஸ்ரீ பிரம்மராம்பிகை.
இந்த ஆலயத்தின் சிறப்பு ராகு மற்றும் கேது இருவரும் ஒரே கல்லில் அமர்ந்து அருள் புரிவதாகும். மேலும் இந்த தலத்தை அனந்தன் , வாசுகி,தட்சன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன், மற்றும் ஆதிசேஷன் ஆகியோர் வழிபட்ட தலமாகும். நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன
ராகு மாறும் கேது தோஷம் உடையவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்வதன் மூலம் அவர்களுடைய தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது உண்மை.
இத்தலம் கும்பகோணம் -காரைக்கால் செல்லும் வழியில் கற்கத்தி என்னும் ஊரில் இருந்து 3 கி .மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இன்றும் இந்த கோவிலில் செவ்வாய்,வெள்ளி,மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கோவிலினுள் பாம்பு இருக்கும் மணத்தை உணரலாம் .